ரோபோ சங்கரின் மகள் திருமணத்துக்கு படையெடுத்து வந்த தமிழ் பிரபலங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் காமெடி பண்ணி அசத்திய ரோபோ சங்கர் பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார் . மேலும் திருமணமான ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்ற மகளும் இருக்கிறார்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இந்த படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே,

நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் இந்திரஜா சங்கர் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தார் நடிகை இந்திரஜா சங்கர் , அதோடு இவர் பாகல் என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் 20 வயதான இந்திரஜா சங்கர் தன்னுடைய முறை மாமனான கார்த்திக் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார் . இந்நிலையில் ரோபோ ஷங்கரின் மகள் திருமணத்துக்கு ,

கமல் முதல் விஜய் சேதுபதி வரை பல நடிகர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *