25 வருட உழைப்பு ..!! சொகுசு காரை வாங்கிய “தொகுப்பாளினி” அர்ச்சனா ..!!

அர்ச்சனா ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நடிகை ஆவார் . ஜெயா தொலைக்காட்சியின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய அர்ச்சனா தொடர்ந்து சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் . குறிப்பாக இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை ,

பெற்று தந்தது ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சி தான் . அது மட்டுமல்லாமல் இவர் தமிழில் வெளியான என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் ,நான் சிரித்தால் ,டாக்டர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே வினித் என்பவரை திருமணம் செய்து கொண்ட அர்ச்சனாவுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் 25 வருடமாக மீடியா துறையில் இருந்து வரும் அர்ச்சனா முதல் முறையாக பென்ஸ் காரை வாங்கி இருக்கிறார் .

மேலும் அதன் விலை ஒரு கோடி ரூபாயாம் . மேலும் 25 வருட உழைப்பில் அந்த காரை வாங்கியதால் அர்ச்சனாவுக்கு ஆனந்த கண்ணீரும் வந்தது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *