ஆடம்பரம் இல்லாமல் மகனுடன் சந்தைக்கு சென்று மீன் வாங்கிய நடிகர் அருண் விஜய்..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அருண் விஜய்.  மூத்த நடிகரான விஜயகுமாரின் மகனான அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ,

என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . இதன்பிறகு இவர் நடித்த குற்றம் 23 ,செக்க சிவந்த வானம் ,தடம், யானை , மிஷன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து தற்போது வணங்கான்,

பார்டர் என்று மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் அருண் விஜய் . இதனிடையே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அருண் விஜய் . திருமணமான இவர்களுக்கு புருவி என்ற மகளும் , அர்னவ் என்ற மகனும் உள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மகனுடன் ஆட்டோவில் சென்று சந்தையில் மீன் வாங்கி வந்திருக்கிறார் நடிகர் அருண் விஜய் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *