சுந்தர் சி தொடர்ச்சியாக பேய் படம் எடுக்க இது தான் காரணம் ..?? ஓப்பனாக சொல்லிய குஷ்பூ ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் சுந்தர் சி .ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சுந்தர் சி கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து முறை மாப்பிளை, உள்ளத்தை அளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம்,

உன்னை தேடி, உள்ளம் கொள்ளை போகுதே , கிரி ,வின்னர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் . மேலும் இவருடைய இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் அரண்மனை.  இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ,

மற்றும் மூன்றாம் பகுதியும் இயக்கியிருந்தார் சுந்தர் சி.  ஆனால் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  அப்படி இருந்தும் தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கி முடித்துள்ளார் சுந்தர் சி .மேலும் இதை பார்த்தவர்கள் ,

இதுக்கு  ஒரு முடிவே கிடையாதா என்று சுந்தர்சியிடம் கேட்டு வந்தனர்.  இதுகுறித்து அரண்மனை 4 விழாவில் பேசிய குஷ்பூ,  நான் சுந்தர்சியுடன் 30 வருடங்களாக வாழ்ந்து கொண்டு வருகிறேன்.ஒவ்வொரு படத்திலுமே எப்படி வித்தியாசமாக ரசிகர்களை ,

மகிழ்விக்கலாம் என்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார்.  மேலும் எங்களுடைய இரண்டு  மகள்களுக்குமே பேய் படம் என்றால் ரொம்ப பிடிக்கும் . அதனால் தான் அவர் தொடர்ந்து பேய் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார் குஷ்பூ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *