4 வயதில் விதை போட்ட ராகவா லாரன்ஸ் ..!! மரமாக வளர்ந்து நிற்கும் இளைஞர் ..!! கேட்டாலே பூரிப்பா இருக்கு ..!!

தமிழ் சினிமா உலகில் இயக்குனர் ,நடிகர், தயாரிப்பாளர், நடன கலைஞர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸ்ராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ் படிப்படியாக மேலே வந்து பின்னர் நடிகராக, இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்தார் . அது மட்டுமல்லாமல் இவர் ஆதரவற்ற இல்லம்,

ஒன்றையும் நடத்தி வருகிறார் . இதனால் ராகவா லாரன்ஸ் மீது அனைவருக்கும் ஒரு நல்ல மரியாதை இருக்கிறது . இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் புதுக்கோட்டையை சேர்ந்த,

சிவசக்திக்கு நாலு வயதாக இருந்தபோது, அவருடைய தாய் எங்களிடம் உதவி கேட்டு வந்தார்.  இதன் பிறகு அவரும் அவருடைய சகோதரியும் என் வீட்டில் தான் வளர்ந்தார்கள் . இப்போது சிவசக்தி பிஎஸ்சி கணிதத்தை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் ,

பணிபுரிந்து வருகிறார் . மேலும்  காவல் துறையில் சேர வேண்டும் என்றும் உழைத்துக்கொண்டிருக்கிறார். அதோடு தன்னைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் விரும்புகிறார் . இதனால் கல்வி தான் எப்போதும் சக்தி வாய்ந்த ஆயுதம்.

வார்த்தைகளை விட செயல்தான் வலிமை மிக்கது என்று கூறியிருந்தார் ராகவா லாரன்ஸ் . தைப் பார்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *