பிடித்தாலும் புளியங்கொம்பாக பிடித்த சித்தார்த் ..!! நடிகை அதிதி ராவ் ராஜ குடும்பத்தை சேர்ந்தவரா..??

தமிழ் சினிமா உலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ,பாடகராகவும் கலக்கிக்கொண்டு வருபவர் நடிகர் சித்தார்த்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சித்தார்த் பாய்ஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை ,

பிடித்துக்கொண்டார்.  இப்படி இருக்கும் நிலையில் நடிக்க வருவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்ட சித்தார்த் திருமணமான சில வருடங்களிலேயே முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.  இதையடுத்து பல வருடங்களாக,

சிங்களாக வாழ்ந்து வந்த சித்தார்த் கடந்த 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் நடித்திருந்தார்.  அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயமும்  நடைபெற்றது . மேலும் நடிகர் சித்தார்த் பிடித்தாலும் புளியங்கொம்பாக தான்  பிடித்திருக்கிறார்.  காரணம் நடிகை அதிதி ராவ் ராஜ குடும்பத்தை சேர்ந்தவராம் . அதாவது அதிதியின் தாத்தா,

இந்திய விடுதலைக்கு முன் ஹைதராபாத் மாநிலத்தின் பிரதமராக இருந்தாராம் . அது மட்டுமல்லாமல் அதிதியின் அம்மாவின் அப்பா ராஜ குடும்பத்தை சேர்ந்தவராம் . இதனால் சித்தார்த் ராஜ குடும்பத்திற்கு மருமகனாக போகிறார் என்று குறிப்பிடத்தக்கது …

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *