பாரதிராஜாவின் பேத்தியும் இயக்குனர் ஆகிவிட்டாரா ..?? பொன்னாடை போர்த்தி பாராட்டித்தள்ளிய இயக்குனர் இமயம் ..!!

தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி இயக்குனர் தான் இயக்குனர் பாரதிராஜா . 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த பாரதிராஜா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத இயக்குனர் என்று பெயர் எடுத்தார். இன்னும் சொல்லப்போனால் தற்போதுள்ள பல இயக்குனர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருந்து வருகிறார் இயக்குனர் பாரதிராஜா . மேலும் பாரதிராஜாவுக்கு திருமணமாகி ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் .

இதில் பாரதிராஜாவின் மகனான மனோஜ் தாஜ்மகால் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரம் ,கடல் பூக்கள் ,வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம்  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

ஆனால் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.  இதனிடையே கடந்த 2006 ஆம் ஆண்டு நந்தனா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார் மனோஜ் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான ,

மதிவதனி மனோஜ் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளாராம்.  அந்த வகையில் தன்னுடைய படிப்புக்காக உருவாக்கிய  முதல் குறும்படத்தில் தன்னுடைய தாத்தாவான பாரதிராஜாவை வைத்து இயக்கியிருக்கிறார் . மேலும் இதை பார்த்த பாரதிராஜா,

தன்னுடைய பேத்தி சிறப்பாக பணியாற்றியதாக கூறி அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி இருக்கிறார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *